Thursday, May 6, 2021

லைலதுல் கத்ர் இரவை அடைவதற்கு இலகுவான சில வழி முறைகள்

 *லைலதுல் கத்ர் இரவை அடைவதற்கு இலகுவான சில வழி முறைகள்...*


கண்ணியத்திற்குரியவர்களே...!


(1) அசாதாரண சூழ்நிலையில் இந்த ரமழானை நமக்கு அல்லாஹ் அடைய செய்து, ரமழானில் கடைசி பகுதியை தற்போது வெகுமதியாக வழங்கி இருக்கிறான்.அல்ஹம்து லில்லாஹ் ! 

(2) கோடி, கோடியாக செலவழித்தாலும் கிடைக்காத நன்மைகளை, அல்லாஹ் ஒரு சதம்  செலவில்லாமல் வாரி வழங்குகிறான்.

(3) கிட்ட தட்ட 83 ஆண்டுகள் வணங்கிய நன்மைளை இழந்து விடாதீர்கள்.

(4) அரசன் முதல் ஆண்டி வரையும், செல்வந்தர்கள் முதல் ஏழை வரையும் அனைவருக்கும் சமமாக நன்மைகளை பெற்றுக் கொள்ள அல்லாஹ் வழி

 செய்துள்ளான். 

(5) அந்த இரவு மஃரிப் முதல் பஜ்ர் நேரம்  வரையாகும்.

(6) மஃரிபை தொழுது விட்டு, இஷா வரை குர்ஆனை ஓதி வாருங்கள்.


https://chat.whatsapp.com/BZvMfou2WfP7h2feaNmfXc


(7) இஷாவை தொழுது முடித்து விட்டு, இரவு தொழுகையிலிருந்து முதல்  இரண்டு

 ரக்அத்துகளை நன்றாக நேரம் எடுத்து தொழுங்கள்.

(8) அடுத்த இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்கு முன் சற்று ஒய்வெடுத்து, குர்ஆனிலிருந்து அரை ஜூஸ்வையோ, அல்லது ஒரு ஜூஸ்வையோ பார்த்து ஓதுங்கள்.

(9) இப்படியே ஒவ்வொரு இரண்டு ரக்அத்துகளுக்கு இடையில் செய்து கொள்ளுங்கள்.

(10) இரவு தொழுகையில் ஆறு ரக்அத்துகளையோ, அல்லது எட்டு ரக்அத்துகளையோ தொழுது விட்டு, மீதியை கடைசி இரவில் தொழுவதற்கு வைத்துக் கொள்ளுங்கள்.

(11) சில திக்ருகளையும், ஸலவாத்தையும் எழுதி பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

சில திக்ருகளை கடைசியில் குறிப்பிடுகிறேன்.

(12) இந்த முதல் கட்ட அமல்களை இரவு 11 மணிவரை அல்லது இரவு 12 மணிவரை ஆர்வத்தோடு, திருப்திகரமாக செய்யுங்கள்.

(13) அதன் பிறகு மூன்று மணி நேரம் தூங்கி 2 மணிக்கோ, அல்லது 3 மணிக்கோ மீண்டும் எழுந்து மீதி இரவு தொழுகையை நன்மையை எதிர்ப் பார்த்து தொழுவுங்கள்.

(14) கடைசி இரவில் உங்களது துஆகளை மிகவும் உருக்கமாகவும், கண்ணீருடனும் ஸஜ்தாவிலிருந்து கேளுங்கள்.

(15) இன்று லைலத்துல் கத்ர் இரவாக இருக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பில் முழு மனதுடன் வழி படுங்கள்.

(16) ஒவ்வொரு நாளும் இப்படியே செய்து வாருங்கள்.

(17) ஆரம்ப இரவில் களைப்பை போக்குவதற்கு டீ, காப்பி, பிளேன் டீ போன்றவற்றை நேரத்தோடு பிளாஸ்கில் மொத்தமாக ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

(18) மேலும் களைப்பை போக்குவதற்கு இடை, இடையே வாசலுக்கு வந்து வானத்தை அண்ணார்ந்து பார்த்து இன்று லைலதுல் கத்ராக இருக்குமோ என்று உங்கள் மனதோடு பேசிக் கொள்ளுங்கள்.

(19) ஒன்றை இழந்தால் ஒன்றை அடையலாம் என்பதற்கு இணங்க இந்த இரவுகளில் தூக்கத்தை இழந்து நன்மைகளில் ஈடுபட்டால் நிச்சயம் இறையருளால் அந்த லைலதுல் கத்ர் இரவையும், அதன் நன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

(20) ஒவ்வொரு ஸஜ்தாவிலும் வேண்டிய துஆகளை கேட்பதோடு, குறிப்பாக ஸஜ்தாவிலே அல்லாஹூம்ம இன்னக்க அfபுவுன் துஹிப்புல் அFப்வ FபஃFப் அன்னீ

 என்று அடிக்கடி சொல்லிக் கொல்லுங்கள்.

(22) சில திக்ருகள்...

(a) லா ஹவ்ல வலா குவத்த இல்லா பில்லாஹி.

(b) சுப்ஹானல்லாஹில் அளீம், வபி ஹம்திஹி.

(c) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்.

(d) ஹஸ்பியல்லாஹூ வ நிஃமல் வகீல்.

(e)  லா இலாஹ இல்லா அன்த, சுப்ஹானக இன்னீ குன்து மினல் லாளிமீன்.

(23) இது போல உங்களுக்கு விருப்பமான முறையில் அட்டவணையை தயாரித்து இந்த கடைசி பத்து இரவுகளிலும் விழித்திருந்து குடும்பத்தோடு அமலில் ஈடுபடுங்கள்.

(24) மாதவிடாய் பெண்கள் தொழுகை மட்டும்  விட்டு, விட்டு ஏனைய அமல்களில் இரவு நேரத்தில் ஆர்வத்தோடு நீங்களும்

 ஈடுபடுங்கள்.

(25) சோதனைகளுக்கு மத்தியில் உங்களுக்கு கிடைத்த ஓய்வையும், ஆரோக்கியத்தையும் சரியாக பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் இந்த லைலதுல் கத்ர் இரவின் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக !




*இன்ஷா அல்லாஹ் பதியப்படும் பதிவுகளை உங்கள் குடும்பத்தாரிடமும் உங்கள் நண்பர்களிடமும் உங்கள் உறவினரிடம் தெரியப்படுத்துங்கள்.*


*Whatsapp*


https://chat.whatsapp.com/DsJLHU2n4cKBVOskodTzXS


*Facebook* 


https://www.facebook.com/மறுமையை-நோக்கி-317902582028151/


*Instagram*


https://instagram.com/marumaiyai_nokki?igshid=3ct4zohorzb6


*Telegram*


https://t.me/marumaiyai_nokki



*நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்*


 *நபி ( ஸல் ) அவர்கள் அவர்களை கூறினார்கள் , ' அல்லாஹ்வின் மீதாணையாக ! ' உங்கள் வாயிலாக ஒரேயொரு ' மனிதருக்கு நேர்வழி கிடைப்பது அரபுகளின் உயரிய செல்வமான | சிகப்பு ஒட்டகங்களை தர்மம் | செய்வதை விட உங்களுக்குச் ' சிறந்ததாகும் " என்றார்கள் . ' ஷஹீஹ் புகாரி 2942*


Tuesday, April 20, 2021

அதிகம் நன்மை

 அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் Fபீஹி


#பொருள்...

தூய்மையும் வளமும்

வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும்

அல்லாஹ்வுக்கே உரியது.


#சிறப்பு...

12 வானவர்கள் இதை இறைவனிடம் கொண்டு செல்ல போட்டி போடும் அளவிற்கு நன்மை அதிகம்.

                              #முஸ்லிம்_1051


#அஸ்ஸலாமு_அலைக்கும்

#வ_ரஹ்மத்துல்லாஹி

#வ_பரக்காத்துஹ்

Read Al-Quran the Easy Way----- அல்-குர்ஆனை எளிதான வழியைப் படியுங்கள்


 

ரமலான் மாதத்தில் ‌ஏராளமான நன்மைகளையைப் பெற்றுத்தரும்

 *ரமலான் மாதத்தில் ‌ஏராளமான நன்மைகளையைப் பெற்றுத் தரக்கூடிய நாவிற்கு எளிதான சில திக்ருகள்*


இந்த திக்ருகளை மொழிவதில் நம்முடைய நாவைத் திளைக்க செய்தால், ஏராளமான நன்மைகள் பெற்று மறுமை வாழ்வை வளமாக்கலாம். இறைவன் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக._


1) *சுப்ஹானல்லாஹ்* (100 முறை)


பொருள்: அல்லாஹ் தூயவன்.


சிறப்பு: ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன.


     - முஸ்லிம் 5230


2) *அல்ஹம்துலில்லாஹ்*


பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.


சிறப்பு: (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.


  நூல் :   - முஸ்லிம் 381


3) *சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி* 


பொருள்: அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது.


 நூல்:    - முஸ்லிம் 381


சிறப்பு: வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டதாகும்.


4) *சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி* (100 முறை)


பொருள்: அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்.


சிறப்பு: கடலின் நுரை அளவிற்கு (அதிகமாக) பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் மன்னிக்கப்படும்.


 நூல்:    - புஹாரி 6405


https://chat.whatsapp.com/DsJLHU2n4cKBVOskodTzXS


5) *சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்*


பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்.


சிறப்பு: நன்மை தீமை நிறுக்கப்படும் மீஜான் என்னும் தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப்  பிரியமானவை.


நூல்:    - புஹாரி 7563


6) *அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா*


பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.


சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன.


  நூல்:   - முஸ்லிம் 1052


7) *லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்* (100 முறை)


பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்.


சிறப்பு: 10 அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.

மேலும், 100 நன்மைகள் எழுதப்படும். 100 தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் இருக்கும்.


   நூல்:  - புஹாரி 3293


8) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்.


பொருள்: இறைவன் தூயவன், அவனுக்கே எல்லாப்புகழும், அவன் மிகப்பெரியவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை.


சிறப்பு: ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.


  நூல்:   - முஸ்லிம் 1302


➡ நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில்  என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல்  இதே நிலையில்தான் நீ  இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.

நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:)


*சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி*


பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.


  நூல்:   - முஸ்லிம் 5272


*இன்ஷா அல்லாஹ் பதியப்படும் பதிவுகளை உங்கள் குடும்பத்தாரிடமும் உங்கள் நண்பர்களிடமும் உங்கள் உறவினரிடம் தெரியப்படுத்துங்கள்.*


*நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்*


 *நபி ( ஸல் ) அவர்கள் அவர்களை கூறினார்கள் , ' அல்லாஹ்வின் மீதாணையாக ! ' உங்கள் வாயிலாக ஒரேயொரு ' மனிதருக்கு நேர்வழி கிடைப்பது அரபுகளின் உயரிய செல்வமான | சிகப்பு ஒட்டகங்களை தர்மம் | செய்வதை விட உங்களுக்குச் ' சிறந்ததாகும் " என்றார்கள் . ' ஷஹீஹ் புகாரி 2942*



லைலதுல் கத்ர் இரவை அடைவதற்கு இலகுவான சில வழி முறைகள்

 *லைலதுல் கத்ர் இரவை அடைவதற்கு இலகுவான சில வழி முறைகள்...* கண்ணியத்திற்குரியவர்களே...! (1) அசாதாரண சூழ்நிலையில் இந்த ரமழானை நமக்கு அல்லாஹ் அ...