*லைலதுல் கத்ர் இரவை அடைவதற்கு இலகுவான சில வழி முறைகள்...*
கண்ணியத்திற்குரியவர்களே...!
(1) அசாதாரண சூழ்நிலையில் இந்த ரமழானை நமக்கு அல்லாஹ் அடைய செய்து, ரமழானில் கடைசி பகுதியை தற்போது வெகுமதியாக வழங்கி இருக்கிறான்.அல்ஹம்து லில்லாஹ் !
(2) கோடி, கோடியாக செலவழித்தாலும் கிடைக்காத நன்மைகளை, அல்லாஹ் ஒரு சதம் செலவில்லாமல் வாரி வழங்குகிறான்.
(3) கிட்ட தட்ட 83 ஆண்டுகள் வணங்கிய நன்மைளை இழந்து விடாதீர்கள்.
(4) அரசன் முதல் ஆண்டி வரையும், செல்வந்தர்கள் முதல் ஏழை வரையும் அனைவருக்கும் சமமாக நன்மைகளை பெற்றுக் கொள்ள அல்லாஹ் வழி
செய்துள்ளான்.
(5) அந்த இரவு மஃரிப் முதல் பஜ்ர் நேரம் வரையாகும்.
(6) மஃரிபை தொழுது விட்டு, இஷா வரை குர்ஆனை ஓதி வாருங்கள்.
https://chat.whatsapp.com/BZvMfou2WfP7h2feaNmfXc
(7) இஷாவை தொழுது முடித்து விட்டு, இரவு தொழுகையிலிருந்து முதல் இரண்டு
ரக்அத்துகளை நன்றாக நேரம் எடுத்து தொழுங்கள்.
(8) அடுத்த இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்கு முன் சற்று ஒய்வெடுத்து, குர்ஆனிலிருந்து அரை ஜூஸ்வையோ, அல்லது ஒரு ஜூஸ்வையோ பார்த்து ஓதுங்கள்.
(9) இப்படியே ஒவ்வொரு இரண்டு ரக்அத்துகளுக்கு இடையில் செய்து கொள்ளுங்கள்.
(10) இரவு தொழுகையில் ஆறு ரக்அத்துகளையோ, அல்லது எட்டு ரக்அத்துகளையோ தொழுது விட்டு, மீதியை கடைசி இரவில் தொழுவதற்கு வைத்துக் கொள்ளுங்கள்.
(11) சில திக்ருகளையும், ஸலவாத்தையும் எழுதி பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
சில திக்ருகளை கடைசியில் குறிப்பிடுகிறேன்.
(12) இந்த முதல் கட்ட அமல்களை இரவு 11 மணிவரை அல்லது இரவு 12 மணிவரை ஆர்வத்தோடு, திருப்திகரமாக செய்யுங்கள்.
(13) அதன் பிறகு மூன்று மணி நேரம் தூங்கி 2 மணிக்கோ, அல்லது 3 மணிக்கோ மீண்டும் எழுந்து மீதி இரவு தொழுகையை நன்மையை எதிர்ப் பார்த்து தொழுவுங்கள்.
(14) கடைசி இரவில் உங்களது துஆகளை மிகவும் உருக்கமாகவும், கண்ணீருடனும் ஸஜ்தாவிலிருந்து கேளுங்கள்.
(15) இன்று லைலத்துல் கத்ர் இரவாக இருக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பில் முழு மனதுடன் வழி படுங்கள்.
(16) ஒவ்வொரு நாளும் இப்படியே செய்து வாருங்கள்.
(17) ஆரம்ப இரவில் களைப்பை போக்குவதற்கு டீ, காப்பி, பிளேன் டீ போன்றவற்றை நேரத்தோடு பிளாஸ்கில் மொத்தமாக ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
(18) மேலும் களைப்பை போக்குவதற்கு இடை, இடையே வாசலுக்கு வந்து வானத்தை அண்ணார்ந்து பார்த்து இன்று லைலதுல் கத்ராக இருக்குமோ என்று உங்கள் மனதோடு பேசிக் கொள்ளுங்கள்.
(19) ஒன்றை இழந்தால் ஒன்றை அடையலாம் என்பதற்கு இணங்க இந்த இரவுகளில் தூக்கத்தை இழந்து நன்மைகளில் ஈடுபட்டால் நிச்சயம் இறையருளால் அந்த லைலதுல் கத்ர் இரவையும், அதன் நன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
(20) ஒவ்வொரு ஸஜ்தாவிலும் வேண்டிய துஆகளை கேட்பதோடு, குறிப்பாக ஸஜ்தாவிலே அல்லாஹூம்ம இன்னக்க அfபுவுன் துஹிப்புல் அFப்வ FபஃFப் அன்னீ
என்று அடிக்கடி சொல்லிக் கொல்லுங்கள்.
(22) சில திக்ருகள்...
(a) லா ஹவ்ல வலா குவத்த இல்லா பில்லாஹி.
(b) சுப்ஹானல்லாஹில் அளீம், வபி ஹம்திஹி.
(c) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்.
(d) ஹஸ்பியல்லாஹூ வ நிஃமல் வகீல்.
(e) லா இலாஹ இல்லா அன்த, சுப்ஹானக இன்னீ குன்து மினல் லாளிமீன்.
(23) இது போல உங்களுக்கு விருப்பமான முறையில் அட்டவணையை தயாரித்து இந்த கடைசி பத்து இரவுகளிலும் விழித்திருந்து குடும்பத்தோடு அமலில் ஈடுபடுங்கள்.
(24) மாதவிடாய் பெண்கள் தொழுகை மட்டும் விட்டு, விட்டு ஏனைய அமல்களில் இரவு நேரத்தில் ஆர்வத்தோடு நீங்களும்
ஈடுபடுங்கள்.
(25) சோதனைகளுக்கு மத்தியில் உங்களுக்கு கிடைத்த ஓய்வையும், ஆரோக்கியத்தையும் சரியாக பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் இந்த லைலதுல் கத்ர் இரவின் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக !
*இன்ஷா அல்லாஹ் பதியப்படும் பதிவுகளை உங்கள் குடும்பத்தாரிடமும் உங்கள் நண்பர்களிடமும் உங்கள் உறவினரிடம் தெரியப்படுத்துங்கள்.*
*Whatsapp*
https://chat.whatsapp.com/DsJLHU2n4cKBVOskodTzXS
*Facebook*
https://www.facebook.com/மறுமையை-நோக்கி-317902582028151/
*Instagram*
https://instagram.com/marumaiyai_nokki?igshid=3ct4zohorzb6
*Telegram*
https://t.me/marumaiyai_nokki
*நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்*
*நபி ( ஸல் ) அவர்கள் அவர்களை கூறினார்கள் , ' அல்லாஹ்வின் மீதாணையாக ! ' உங்கள் வாயிலாக ஒரேயொரு ' மனிதருக்கு நேர்வழி கிடைப்பது அரபுகளின் உயரிய செல்வமான | சிகப்பு ஒட்டகங்களை தர்மம் | செய்வதை விட உங்களுக்குச் ' சிறந்ததாகும் " என்றார்கள் . ' ஷஹீஹ் புகாரி 2942*